5 ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் ஜனாதிபதி உரை!

Mayoorikka
2 years ago
5 ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் ஜனாதிபதி உரை!

உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய இறக்குமதி பொருட்காட்சியான 5 ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியுள்ளார்.

சீன சந்தையில் வளரும் நாடுகள் பிரவேசிக்க சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி புதிய மற்றும் புதுமையான சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கலந்துரையாடல்கள் எமது பொருளாதார உறவுகளை விரைவில் மறுசீரமைக்கும் என்று நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்க் உள்ளிட்ட அந்நாட்டு மாநில தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

5ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், சர்வதேச கொள்வனவு, முதலீட்டு முன்னேற்றம், மனித தொடர்பு, திறந்த ஒத்துழைப்பு ஆகிய 4 தளங்களின் செயல்திறன்களைக் கொண்ட இப்பொருட்காட்சி, புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கம், உயர் நிலை திறப்பு, பலதரப்புவாதம் ஆகியவற்றுக்குத் துணை புரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!