6 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளரைக் கைது செய்ய விசாரணை
ரஜரட்ட பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 6 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலையின் விளையாட்டு பயிற்சி பயிற்றுவிப்பாளர் ஒருவரை கைது செய்ய கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 மற்றும் 17 வயதுடைய 6 சிறுமிகளில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
கெக்கிராவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 6 மாணவிகள் அடையாளம் காணப்பட்டு அந்த மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆறு மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, விளையாட்டு பயிற்சி பயிற்றுவிப்பாளர் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.