இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mayoorikka
2 years ago
இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.

நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று இன்று  அதிகாலை 1 மணியளவில் நடுதிட்டு பகுதியை சென்று அடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்ப்பாக தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபடுவார்கள் என மரைன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!