ஆசிரியையின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிக்குவிற்கு கடூழிய சிறை
Prathees
2 years ago
பெண் ஆசிரியை ஒருவரின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட துறவி ஒருவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்ப்யூட்டர் குற்றச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டிற்காக 5000 ரூபா அபராதம் செலுத்தவும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான 30 வயதுடைய ஆசிரியர், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி பிரபலமடைந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த போலி நிர்வாண படங்களை மாணவர்களுக்கு விநியோகித்ததாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.