சுற்றுலாத் துறை மூலம் ஒரு பில்லியனுக்கும் அதிக வருமானம்!
Mayoorikka
2 years ago
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் 75.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவிக்கின்றது.