யாழ். பல்கலை சித்த மருத்துவபீட மாணவி வவுனியா விபத்தில் பலி

Prabha Praneetha
2 years ago
யாழ். பல்கலை சித்த மருத்துவபீட மாணவி வவுனியா விபத்தில் பலி

நேற்று நள்ளிரவு 12.15 வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு குடைசாய்ந்தபோதுஏற்பட்ட விபத்தில், பஸ்ஸின் சாரதி மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக  சித்த மருத்துவத்துறையின் முதலாம் வருட மாணவி செல்வி. ராமகிருஸ்ணன் சயாகரி (வயது 23 )அவர்கள் வவுனியா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இருந்து வந்து 
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில் கல்விகற்றுக்கொண்டிருந்த போது இந்தவார மூன்று நாள் லீவு கருதி வீடு சென்றுகொண்டிருந்தபோது.....வவுனியா பஸ் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிள்ளையின் பெற்றோர், வாய்பேச முடியாதவர்கள் என அறிய முடிகின்றது.
எதிர்பாராத விபத்தில் மரணமடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை நாமும் பிரார்த்திப்போம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!