பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர் 12 மடிகணினிகளுடன் கைது

Prathees
2 years ago
பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர் 12 மடிகணினிகளுடன் கைது

கொழும்பின் பல பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தொட்டலக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரால் திருடப்பட்ட 12 மடிகணினிகள், 2 பிரிண்டர்கள், 2 கமராக்கள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உபகரணங்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸில் வசிக்கும் 30 வயதுடைய சந்தேகநபரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!