மது பழக்கத்திற்கு அடிமையான பெண் அரசியல்வாதி
அரசாங்கத்தின் பிரபல பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், அங்கு கடமையாற்ற முடியாது எனக்கூறி, விலகிக்கொண்டுள்ளதாக அந்த பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கடமையாற்றிய 100க்கும் மேற்பட்ட பொலிஸார், அவரிடம் கடமையாற்ற முடியாது எனக்கூறி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பெண் அரசியல்வாதி மாலையில் மது அருந்தி விட்டு, கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மது அருந்திய பின்னர், தொடர்ந்தும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் இந்த பெண் அரசியல்வாதி, பொலிஸ் அதிகாரிகளை தூஷண வார்த்தையை கூறி அழைத்து, சிகரட் வாங்கி வர கடைக்கு அனுப்புவதாக பொலிஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.