அமைச்சரவை மாற்றம் செய்வதில் நிலவி வரும் தடை குறித்த தகவல்கள் கசிவு
அமைச்சரவை மாற்றம் செய்வதில் நிலவி வரும் தடை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே புதிய அமைச்சர்களை நியமிப்பதில் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 12 பெயர்கள் பரிந்துரை
அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 12 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பட்டியல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை காரணமாக இந்த கால தாமத நிலை உருவாகியுள்ளது.
அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அடிக்கடி கேள்வி எழுப்பிய போதிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு விருப்பமின்மையினால் இந்த கால தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.