எரிவாயு விலையில் இன்றைய தினம் திருத்தம் – இன்று வெளியாகிறது அறிவிப்பு
Reha
2 years ago
எரிவாயு விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தற்போது கையிருப்பில் போதுமான எரிவாயு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிவாயு விலை குறைக்கப்படும் என பரப்படும் தகவலை அடுத்து வர்த்தகர்கள் எரிவாயுவை பதிவு செய்வதில் இருந்து விலகியுள்ளதாகவும் இதன் காரணமாகவே சில இடங்களில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எனினும், விலை குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது அறிவிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.