ஈ-சிற்றி ஆங்கில கல்லூரியின் பதின்நான்காவது பட்டமளிப்புவிழா!
06-11-2022 இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் திறமையாகவும் நேர்த்தியாகவும் அர்ப்பணிப்போடும் மாணவர்களை கல்வியாலும் ஆளுமையாலும் வழிநடாத்தி மிக உயரிய நிலைக்கு இட்டுச்சென்று அதற்குரிய பலாபலன்களை மாணவர்களுக்கு வழங்கும் அதிஉன்னதமான தருணம் இன்றைய தருணம்!!
இந்த நிறுவனம் கல்வியை மட்டுமே வழங்காது மிக உன்னதமான பல சேவைகளையும் திறன்பட செய்கின்றது. கல்வியில் திறமைகாட்டிநிற்கும் மாணவர்களினது நிதி நிலையினை அறிந்து அவர்களுக்குரிய தேவைகள் எதுவோ அதையுணர்ந்து உதவிடும் சேவை மனப்பாங்குகள் ஏனெனில் இந்த நிறுவத்தின் அதிபர் மிக சிறந்த சமூக சேவையாளன் என்பதனாலேயே,
மேலதிகமாக கூறவேண்டுமாயின் அனைத்து கல்விசார் நிறுவனர்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக கல்வியோடு மட்டும் நின்றுபோகாது கல்வியால் உயரக்கூடிய மாணவ மாணவிகளை இனம்கண்டு அவர்களுக்கு உதவிடும் உயரிய சிந்தனையாளர் இதன் நிர்வாக இயக்குநர் திரு லயன் ரஜீவன் அவர்கள்.
ஆகவே இத்தனை சிறப்புமிக்க இந்த கல்வி நிறுவனம் பற்பலநூற்றாண்டுகள் சந்ததிசந்ததியாக கோலோச்சி மாணவ மாணவிகளுக்கு மிகச்சிறந்த கல்விச் சேவைகளை வழங்க எல்லாம்வல்ல அந்த அம்மன் சக்தி தாயை மனதில் நிலைநிறுத்தி மனமகிழ்வோடு வாழ்த்துகின்றோம்.