பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது

Kanimoli
2 years ago
பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றியதாக கூறப்படும் பெண்ணொருவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதவிய சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த பெண்ணும் கலேன்பிந்துவெவ, தோடாமடுவ சிவலாகுளம் பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்ணும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

குழந்தைகள் பிறந்த பின்னர், குழந்தைகள் சுகாதார பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது, சந்தேக நபரான பெண், தனக்கு பிறந்த பெண் குழந்தையை வைத்து விட்டு, அங்கிருந்த ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டதாக 42 வயதான பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பதவிய, சிறிபுர பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

பெண் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வழக்கு விசாரணை அடுத்தாண்டு மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!