திலினி பிரியமாலி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.

Kanimoli
2 years ago
 திலினி பிரியமாலி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.

திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மோசடி செய்த பில்லியன் கணக்கான பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டதா என்பதை அறிய குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரபல வர்த்தகர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்டோரிடம் திலினி பிரியமாலி மோசடி செய்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கூறியுள்ளது.

வர்த்தகர், செல்வந்தர்கள், செல்வந்தர்களான அரசியல்வாதிகள்,நடிகர், நடிகைகள், பௌத்த பிக்குகள் உட்பட பலரை ஏமாற்றி திலினி பிரியமாலி பெற்றுக்கொண்ட கோடிக்கணக்கான பணத்திற்கு என்ன ஆனது என்பதை இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த பண மோசடி தொடர்பான வழக்கில் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!