மைத்திரியை வெளியேற்ற சந்திரிகாவின் வீட்டில் முக்கிய கலந்துரையாடல்
Prathees
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் உள்ளக அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகள் போன்ற விடயங்கள் காரணமாக அவர் கட்சியின் தலைமைப் பதவியில் இனியும் நீடிக்க முடியாது என இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார உள்ளிட்ட கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.