துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Prasu
2 years ago
துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர்  எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துபாய் மற்றும் ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு வந்த தருணத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 44 அகவையுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறார்களுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தம்புள்ளை பிரதேசத்தில் 6 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!