இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?பிரபல சோதிடர் தகவல்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்று பிரபல சோதிடர் தெரிவித்துள்ள நிலையில் பல சர்ச்சைகள் வெடித்துள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும் என்பதில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுந் தரப்பினர் உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். மறுபுறம் வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்த்தரப்பும் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பிலும் தற்போது அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில்1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்தவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்று பிரபல சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என சுமணதாச அபேகுணவர்தன கணித்திருந்த போதும், அந்த கணிப்பை வெற்று மாயையாக மாற்றி வெற்றியை மைத்திரிபால சிறிசேன பெற்றார்.
குறித்த சம்பவத்தின் பின்னர் சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன மீது பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. வெகு நாட்களில் பின்னர் அவர் தற்போதைய அரசியல் களம் குறித்து தனது கணிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா?, ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்?, அடுத்த ஜனாதிபதி யார் ? ,சஜித்தா? ,அனுரவா ? ,நாமலா? ,ரணிலுக்கு மிக சக்திவாய்ந்த ஜாதகம் உள்ளதா? என்று பல கணிப்புக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பிரபல சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளவதாவது, தேசிய பட்டியல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது இதுவே முதல் தடவையாகும்.
உண்மையைச் சொல்வதென்றால், இந்நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு நட்பாக இருந்தவர் ரணில் ஒருவரே.அதனால் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது.
ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்தால், முதலில் அந்த வீட்டைப் பாதுகாக்கக்கூடிய நபரை அழைப்பார்கள் , அப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது என அவர் கூறினார்.
இலங்கையின் அடுத்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி 1967ஆம் ஆண்டு பிறந்தவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.