தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

Kanimoli
2 years ago
 தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் -வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்வதுடன், நாட்டின் பிற பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!