நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள கிணறில் விழுந்து இளைஞர் பலி
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள கிணறில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.
ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (19) கிணற்றடியில் நின்ற போது நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டுள்ளனர்.
கிணற்றில் விழுந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.