இன்று உலக எயிட்ஸ் தினம் - இலங்கையின் இளைஞர்கள் ஆபத்தில்!

Prathees
1 year ago
இன்று உலக எயிட்ஸ் தினம் - இலங்கையின் இளைஞர்கள் ஆபத்தில்!

எய்ட்ஸ் பாதிப்புஇ தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

கடந்த வருடத்தை விட இந்த வருடம் புதிதாக கண்டறியப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாடசாலைகளில் பாலினக்கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் தேசிய பாலுறவு நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலகலாவிய சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள்  முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகில் 2021ன் படி 3.84 கோடி நோயாளிகள் உள்ளனர்.

2021ல் மட்டும் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1988 முதல் இதுவரை 8.42 கோடி பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!