பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Kanimoli
1 year ago
பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு தெற்கு பொலிஸ் வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே தனக்குக்கீழ் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வாய்ப்பகுதி கடுமையாக தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்த உத்தியோகத்தரின் வாயை இறுக மூடிப்பிடித்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வாய்ப்பகுதியில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அவரது சத்திரசிகிச்சைக்குட்படுத்த பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

அதேநேரம் அவரைத் தாக்கிய பிரதான பொலிஸ் பரிசோதகர் முன்னரும் வேறு ஒரு பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் அங்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி காயப்படுத்தியிருந்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பில் நீண்ட காலம் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு சிறிது காலத்திற்குள்ளாக இன்னொரு உத்தியோகத்தரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!