கரையை கடந்துள்ள மாண்டஸ் புயல்!

தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும் என தமிழக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.
மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பல பாதிப்புக்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையிலேயே இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் வானிலை ஆய்வாளர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புயல் கரையை கடந்த பகுதிகளில் தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும்.
எதிர் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவிழுந்த மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழும் சாத்தியம் காணப்படுவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.



