ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Kanimoli
2 years ago

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல் ஊடாக விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



