சீனா இலங்கைக்கு வழங்கிய கரிம உரத்தில் மாசு வர காரணம் குறித்து தகவல்!

Kanimoli
1 year ago
சீனா இலங்கைக்கு வழங்கிய கரிம உரத்தில் மாசு வர காரணம் குறித்து தகவல்!

இலங்கை நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது தொற்று அடங்கிய உரத்தை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கைக்கு சீன நிறுவனம் அழுத்தம் கொடுத்ததாக இந்தோ பசுபிக் மூலோபாய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் அந்த  கரிம உரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே, நாட்டின் பயிர் உற்பத்தித்திறனில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டது என்றும் மையம் குறிப்பிட்டுள்ளது.
இதுவே உலகின் மிக உயர்ந்த உணவுப் பணவீக்க விகிதத்தை இலங்கையில் ஏற்படுத்தியது என்றும் இந்தோ பசுபிக் மூலோபாய தொடர்பு மையம் தெரிவித்துள்ளதாக இந்திய ஏஎன்ஐ ஊடகம் குறிப்பி;ட்டுள்ளது
2021 ஏப்ரலில்; இரசாயன உரங்களை தடை செய்த முதல் நாடு இலங்கையாகும்.
400 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்கும் முயற்சியில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்து, கரிமப் பயன்பாட்டைத் தேர்வுசெய்ய முடிவு செய்தார்.
இதற்காக சீனாவின் கிங்டாவோ குழுமம் 99,000 மெட்ரிக் தொன் கரிம உரங்களை தருவதற்கு இணங்கியது.
எனினும் அந்த குழுமம் இலங்கைக்கு அனுப்பிய உரம் எர்வினியா என்ற பாக்டீரியாவால் கடுமையாக மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
எர்வினியா தொற்று தாவர நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் பொதுவாக பல்வேறு வகையான பழங்கள், தானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளையும் பாதிக்கிறது.
கரிம உரங்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இரசாயன உர பயன்பாட்டை விட கணிசமான சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குவதே இதற்கான காரணமாகும்.
கரிம உரங்களை உற்பத்தி செய்ய விலங்கு உரம், கழிவுநீர் சேறு மற்றும் உணவு கழிவுகள் போன்ற கரிம பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், தயாரிப்பின்போது பயன்படுத்தப்படும் கழிவுகளின் சுத்திகரிப்பு இங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.
கடந்த சில தசாப்தங்களாக சீனாவில் 10,000 க்கும் மேற்பட்ட பன்றிகள் அல்லது 5,000 கால்நடைகள் கொண்ட பல பெரிய அளவிலான விலங்கு பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஏராளமான விலங்குகளின் கழிவுகள் உருவாகின்றன,
எனினும் இது உரிய முறையில் சுத்தகரிக்கப்படாவிட்டால் உரத்தில் மாசுபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தோ பசுபிக் மூலோபாய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்கள் மற்றும் நோய்களின் அனைத்துப் பதிவுகளையும் சீனா இரகசியமாகவே  வைத்திருக்கிறது.
இந்தநிலையில் இதனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் சடலங்கள் கரிம உரங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதா என்ற கவலையை இப்போது எழுப்புகிறது என்றும் இந்தோ பசுபிக் மூலோபாய தொடர்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!