சுற்றுலா வீசா மூலம் மலேஷியாவில் தொழில் வழங்குவதாகக் கூறி மோசடி செய்த பெண் ஒருவர் கைது

Kanimoli
1 year ago
  சுற்றுலா வீசா மூலம் மலேஷியாவில் தொழில் வழங்குவதாகக் கூறி மோசடி செய்த பெண் ஒருவர் கைது

 சுற்றுலா வீசா மூலம் மலேஷியாவில் தொழில் வழங்குவதாகக் கூறி 9 பேரிடமிருந்து 5,015,000 ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த மோடசியில் ஈருபட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் மலேஷியாவுக்குச் செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணகளின் அடிப்படையில் குறித்த பெண் சிக்கியுள்ளார்.

கைதான பெண் ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்மை கண்டறிப்பட்டதாகவும் அவர் விசேட விசாரணைப் பிரிவைத் தவிர்த்து வந்ததாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!