உபவேந்தர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 12 மாணவர்கள் இடைநீக்கம்
Kanimoli
2 years ago

பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 12 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் திலக் பண்டார தெரிவித்தார்.
இதனையடுத்து விசாரணைகளுக்கு உட்பட்டு அந்த மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.



