இலங்கையில் காற்றின் தரம் தொடர்ந்தும் ஆரோக்கியமற்ற நிலையில்!
Nila
2 years ago

இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (13) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண் பின்வருமாறு பதிவாகியிருந்தது.
நீர்கொழும்பு - 144
கண்டி - 136
கம்பஹா 127
கொழும்பு - 122
யாழ்ப்பாணம் 119
அம்பலாந்தோட்டை - 117
தம்புள்ளை - 88
இரத்தினபுரி - 70
நுவரெலியா - 53
101 முதல் 150 வரையிலான தரத்தினை கொண்ட காற்று, சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



