3 சந்தேக நபர்கள் 5 கஜமுத்துடன் கைது !
Prabha Praneetha
2 years ago

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த இரவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் வைத்து 3 சந்தேக நபர்கள் 5 கஜமுத்துடன் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைதானவர்கள் பிபிலை பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக முச்சக்கரவண்டியில் கடத்தி சென்ற நிலையில் விசேட அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.



