பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது
Prabha Praneetha
2 years ago

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பேராதனை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேகத்திற்கிடமான மாணவர்கள் நிட்டம்புவ, சதலங்கல, கிரித்தலே, மாத்தளை, ஹெனகமுவ மற்றும் கலகம்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 மாணவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



