பொருளாதார நெருக்கடியால் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு!

Mayoorikka
1 year ago
பொருளாதார நெருக்கடியால் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு!

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

யுஎஸ்எய்ட் நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 93.8 வீத இளைய தலைமுறையினரும், 93.2வீத வயதானவர்களும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை என்பது தெரியவந்துள்ளது..

42.1வீத இளைஞர்களும், 47.4வீத வயதானவர்களும்; மட்டுமே அரசுத் துறைக்கு ஆட்களை சேர்ப்பது குறைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்
இலங்கையில் போருக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குச் சில நன்மைகளை ஏற்படுத்தும் என 69.1வீத இளைஞர்களும் 69.4 வீத முதியவர்களும் நம்புகின்றனர்.

இதற்கிடையில், 76.6 வீத இளைஞர்களும், 71.9வீத வயதானவர்களும்; நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!