அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர்களை கைது செய்ய முடிவு

Kanimoli
1 year ago
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர்களை கைது செய்ய முடிவு

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர்கள் மற்றும் பொருள் பதுக்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்தவாரம் முதல் குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விசேடமாக பண்டிகை காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர்கள் மற்றும் பொருள் பதுக்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவே இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தக உரிமையாளர்கள் இது தொடர்பில் தெளிவுடன் இருக்கவே இந்த சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டைக்கான நிர்ணய விலையை நேற்றைய(14) தினத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(14) உத்தரவிட்டிருந்தது.

எனினும், இதுவரை முட்டைக்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மீண்டும் முட்டை தொடர்பான வழக்கு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!