மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் தினுஷ லக்ஷான்

குத்துச்சண்டை மூலம் இலங்கைக்கு புகழைக் கொண்டு வந்த திறமையான குத்துச்சண்டை வீரரான தினுஷ லக்ஷான் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
கண்டியில் ஒரு குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, வெட்டி தீ வைத்து ஹந்தான காற்றாடி மைதானத்திற்கு அருகில் உள்ள பாழந்தை இடத்தில் விட்டு சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி, வைத்தியசாலை லேனில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, நபர் ஒருவர் அவரை வைத்தியசாலை லேன் சந்திக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேச வேண்டும் என கூறி அழைத்து சென்று அங்கு இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த குழுவொன்று இரும்புக்கம்பினால் தாக்கி அவரை கடத்தி சென்றதாக தினுஷ லக்ஷானின் தாயார் தெரிவித்துள்ளார்.
மகனின் கையடக்கத் தொலைபேசி வேலை செய்யாத காரணத்தினால், அவரது உறவினர்களும் நண்பர்களும், தனது மகன் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு பாழடைந்த நிலத்தில் விடப்பட்ட நிிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
லக்ஷான் உறவினர்களால் உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதுகாப்புப் தரப்பு ஒன்றினால் இந்தத் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



