நீதி அமைச்சருக்கும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

நீதி அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷூல்க்கிற்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சம்பிரதாயமாக விடுவிக்கப்படுவதாகவும், இந்நாட்டின் சட்ட அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களில் 17 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் மேலும் பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளுக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவு பாராட்டத்தக்கது எனவும் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.



