இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தாக்கிக் கொல்லப்பட்டார்

Reha
1 year ago
இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தாக்கிக் கொல்லப்பட்டார்

இது தமிழ் பீக் செய்திகள்.  
தமிழ் பீக் செய்திகளில் இலங்கை, இந்தியா உட்பட்ட வெளிநாட்டுச் செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள் இடம்பெறுகின்றன.

பிரதான செய்திகளுக்கு செல்லும் முன்னர் முக்கிய செய்திகளின் தலைப்புக்கள்.
1) இலங்கைக்கு உதவியளிக்க பாரிஸ் கிளப் தயாராகிறது
2) இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தாக்கிக் கொல்லப்பட்டார்
3) இந்திய இந்து நாடாக மாறிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4) ரஸ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மின்சார,நீர் கட்டமைப்புகள் முடக்கப்பட்டுள்ளன
5) அமரிக்காவின் மகளிர் கிரிக்கட் அணியை ஆக்கிரமித்துள்ள இந்திய வம்சாவளிகள்

இலங்கைச் செய்தி 
பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ், நிதி நெருக்கடிக்கு விரைவில் தீர்வு எட்டப்படுவதை உறுதி செய்யும் முயற்சியில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பேக்டெட், நேற்று மாலை தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனை குறிப்பிட்டார்.

இலங்கை உட்பட அனைத்து தரப்பினரின் நலன் கருதி உடனடி தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டவுடன் பிரான்ஸின் கடன் திட்டங்கள், மீள ஆரம்பிக்கப்படும் என தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைச் செய்தி 
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனத்தின் பணி;ப்பாளரான தொழிலதிபர் -தினேஸ் சாப்டர் நேற்று மாலை தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம், கடன் கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கட் வர்ணனையாளர் ஒருவருக்கு 143 கோடி ரூபாவை சாப்டர், கடனாக வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பில் ஏற்கனவே அவர், காவல்துறையில் முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் தினேஸ் சாப்டர், நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது, தாம் பெருந்தொகை கடன் கொடுத்த ஒருவரை சந்திக்கச் செல்வதாக கூறியே சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்தியச் செய்தி
இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்டி லெவின்; எச்சரித்துள்ளார்.

மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெவின், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். 

இந்தநிலையில் பதவிவிலகுவதற்கு முன்னர் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றிய அவர்,மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். தாம் இந்து மதத்தை நேசிப்பவன் என்றபோதிலும்  இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தினார்.

சர்வதேச செய்தி
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஸ்யா தொடர்ந்தும் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஸ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும் கீவ் நகரின் தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

விளையாட்டுச் செய்தி
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க வீராங்கனைகளின் பெயர் பட்டியலை அந்த நாட்டின் கிரிக்கெட் சபை அண்மையில்; அறிவித்தது. 

அதன்படி 15 பேர் கொண்ட அந்த அணியின் அனைத்து வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.இந்தநிலையில் ரசிகர்கள், இது அமெரிக்க அணியா? அல்லது இந்திய 'பி' அணியா என நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர். 

இத்துடன் தமிழ் பீக் செய்திகள் நிறைவுக்கு வருகின்றன.
மீண்டும் நாளை சந்திப்போம்...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!