சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து பொரளை தனியார் மருத்துவமனை மனு தாக்கல்

தமது மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து கொழும்பு பொரளை தனியார் மருத்துவமனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
உறுப்புக் கடத்தலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கொழும்பு பொரளை தனியார் மருத்துவமனை மறுத்துள்ளது.
இதேவேளை, குறித்த மருத்துவமனையில்,சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுநீரக நோயாளர்களின் நலன் தொடர்பில் ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு ஜனவரி 16 ஆம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் தாம் முக்கிய பங்காற்றியதாகவும், 1000க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்கு தமது மருத்துவமனை மனுதாரரான, தனியார் மருத்துவமனை தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தனது மருத்துவமனையின் மீது பல தடவைகள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவை பயனற்றுப் போனதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.



