தமிழ் பீக் செய்திகளின் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டுச் செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள்!

Reha
1 year ago
தமிழ் பீக் செய்திகளின் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டுச் செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள்!

இது தமிழ் பீக் செய்திகள்

கிரதான செய்திகளுக்கு செல்லும் முன்னர் முக்கிய செய்திகளின் தலைப்புக்கள்.

1)இலங்கையின் பொருளாதார சீரழிவு, ஏனைய நாடுகளுக்கு தொடர்ந்தும் உதாரணமாக காட்டப்படுகிறது.
2)200க்கும் மேற்பட்டவர்களை காவுகொண்ட, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபர் ஒருவர்,பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3)இந்தியாவின் பொருளாதாரக்கொள்கைகள் பொது மக்கள் வாழவேண்டும் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார்
4)ஜோர்தானில் மக்கள் போராட்டம் தொடர்கிறது
5)பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கான போட்டி இன்று இடம்பெறுகிறது.

இலங்கை செய்தி 

இலங்கையை மேற்கோள் காட்டி பொருளாதார எச்சரிக்கையை விடுக்கும் செய்திகள் நாள்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

முன்னதாக இந்தியாவின் எதிர்க்கட்சிகள்,இந்திய பொருளாதார கொள்கையை, இலங்கையின் பொருளாதார நிலைமையைக் காட்டி, மோடியின் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்து வந்தன.

பின்னர் பங்களாதேஸின் அரசாங்கம், இலங்கையை போன்று தமது நாட்டின் பொருளாதாரம் சீர்குழையாது என்று கூறிவந்தது.
இந்தநிலையில் நாணய மாற்று விகிதத்தை சீரமைத்தல் மற்றும் எரிபொருள் மானியத்தை நீக்குதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிடின், நைஜீரியாவும் இலங்கையைப் போன்று வங்குரோத்தடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை செய்தி 

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடரில், கொழும்பு கிங்ஸ்பெரி விருந்தகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பில் 3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிலா மர்சுக் என்ற 8ஆவது சந்தேகநபரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவரின் மனைவியையும் மற்றுமொருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதலின்போது 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியச் செய்தி 

இந்தியாவின், அடுத்த நிதி ஆண்டுக்கான பாதீடு, முன்னைய பாதீடுகளின் தன்மையைப் பின்பற்றியே அமையும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று ஆரம்பமான, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் பொதுக்கூட்ட ஆரம்ப விழாவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2047ஆம் ஆண்டில், இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்த நிலையை அடையும் அந்த நேரத்தில்  இந்தியாவில் எதிர்கால சந்ததியினர் வாழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசாங்கத்தின் பொருளாதாரத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செய்தி 

ஜோர்தானில் கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக, பல பகுதிகளில் பாரிய போராட்ட அலைகள் தோன்றியுள்ளதுடன், அங்கு இடம்பெற்ற கலவரங்களில் ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழந்தார்.

வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு கோரி நேற்றும், நேற்று முன்தினமும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அதனை கட்டுப்படுத்தச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்தி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில், மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குரோஸியா மற்றும் மோரோக்கோ அணிகள் இந்தப் போட்டியில் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி, இன்று இரவு 8.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!