மதுபோதையில் தனது தாயை தாக்கிய தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்
#SriLanka
#Murder
#Death
#Arrest
Nila
2 years ago
மதுபோதையில் தனது தாயை தாக்கிய தந்தையை மகன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக மாவனெல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாவனெல்ல மகேஹெல்வல, பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மூத்த மகன் கத்தியுடன் கைதுசெய்யப்பட்டதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் சண்டையிட்டு அவரைத் தாக்கியபோதே தந்தையின் மார்பில் மகன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



