2022 டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்

2022 டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இது 2021 இல் பதிவான 194, 495 பேருடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகரிப்பை காட்டுகிறது.
2022 டிசம்பர் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 73,314 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை ரஷ்யாவில் இருந்து(15,681 ) பதிவாகியுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து 13,892 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6000 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 4000 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா 3000 சுற்றுலாப் பயணிகளும், மாலைதீவு, பிரான்ஸ் மற்றும் கனடாவில் இருந்து தலா 2000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்து 1,312 சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



