ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது
#SriLanka
#Refugee
#Arrest
Prasu
2 years ago

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர்.
அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில் இருந்துள்ளனர்
மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்



