அதியுச்ச விலை வரம்பை பின்பற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய்யை விற்பனை செய்வதற்கு ரஷ்யா தடை

Kanimoli
1 year ago
அதியுச்ச விலை வரம்பை பின்பற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய்யை விற்பனை செய்வதற்கு ரஷ்யா தடை

மேற்குலக நாடுகள் இணங்கிய அதியுச்ச விலை வரம்பை பின்பற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய்யை விற்பனை செய்வதற்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.

இது தொடர்பான தொடர்பான விளாடிமீர் புடினின் ஆணையானது அரசாங்க இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் சர்வதேச சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கான பதில் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் போருக்கான நிதியை ரஷ்யா பெறுவதை தடுக்கும் வகையில் பாரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 நாடுகள் கடந்த செப்டம்பர் மாதம் முன்வைத்த அதியுச்ச விலை வரம்பு தொடர்பான யோசனையானது, டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன்பிரகாரம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யை 60 டொலருக்கு மேல் செலுத்துவதை இந்த அதிஉச்ச விலைவரம்பானது தடை செய்கின்றது.

இந்த நிலையில் விலை வரம்பை விதிக்கும் யாருக்கும் தனது எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் விற்கப்படாது என்று ரஷ்யா தற்போது கூறியுள்ளது.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்பதுடன், இந்தத் தடையின் கீழ் வரும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சிறப்பு அனுமதியை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஏற்றுமதி தடை குறித்து ஒபெக் நாடுகளுடன் கலந்துரையாடவில்லை என கூறியுள்ள ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி மெத்வடேவ், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு பொருத்தமான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஷ்யாவிற்கு இறையாண்மையான உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் விநியோக குறைப்புகளால் செலவுகள் அதிகரித்துள்ள பின்னணியில் அடுத்த ஆண்டு எரிவாயுவிற்கு அதிக விலையை நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும் என ஜேர்மன் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!