கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணி கப்பல்

#SriLanka #America #Port #Tourist #துறைமுகம் #கப்பல் #Colombo
Prasu
1 year ago
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்காவின்  பணக்கார சுற்றுலா பயணி கப்பல்

அமெரிக்காவின்  பணக்கார சுற்றுலா பயணிகளுடன் Ocean Odyssey கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதில் அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானதுடன் 105 மீற்றர் நீளமும் 18.5 மீற்றர் அகலமும் கொண்டது.

இந்த கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.  

இந்த கப்பலில் வரும் சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கி சொகுசு பஸ்களில் சுமார் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய நகரங்களை சுற்றி பார்வையிட்டு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து 21 ஆம் திகதி கப்பலில் ஏறுவார்கள் என கப்பல் முகவர் நிறுவனமான "டேவ் மரைன்" தெரிவித்துள்ளது. 

பின்னர் டிசம்பர் 21ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு கப்பல் புறப்பட உள்ளது.  

கப்பல் கொழும்பு துறைமுகத்தை முதன்முறையாக வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கப்பலின் தலைவருக்கு நினைவு சின்ன பரிமாற்றம் இடம்பெற்றது.

 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு, துறைமுக அதிகாரசபை மற்றும் கப்பல் முகவர் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!