இன்றைய வேத வசனம் 29.12.2022: அவர் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 29.12.2022: அவர் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்

காகங்களிடமிருந்து சுவாரஸ்யமான காரியங்களையும் அவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்களையும் பார்ப்போம்,

காகங்களைப் பற்றின சில சுவாரஸ்யமான தகவல்கள்:-

உலகில் சுமார் 40 வகையான காக இனங்கள் உள்ளன. மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாக 20 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியவை.

பறவைகளில் காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை. கூர்மையான பார்வை மற்றும் வலிமையான இறக்கைகளை கொண்டவை.

காகங்கள் அனைத்துண்ணிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், புழுக்கள், தவளை. நண்டு. மீன், எலி, இறந்த பிராணிகள் என்று அனைத்தையும் உண்பவை.

காகம் ஒரு கூட்டுப் பறவை, தனக்கு கிடைத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் தன் இனத்தை அழைத்து பகிர்ந்து உண்ணும் குணம் கொண்டது.

காகங்கள் செத்து, அழுகின பிரேதங்களை உண்பதன் மூலம் அழுகின உடல்கள் அகற்றப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

வேதாகமத்தில் காகம்:-

வேதாகமத்தில் 11 இடங்களில் காகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பறவை காகம்.

நோவா தான் பேழையில் செய்திருந்த சன்னலை திறந்து "ஒரு காகத்தை வெளியே விட்டான், அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும் வரைக்கும்  போகிறதும் வருகிறதுமாய் இருந்தது" என்று ஆதியாகமம் 8:7ல் வாசிக்கிறோம். 

காகத்திற்கு அநேக நல்ல குனாதிசயங்கள் இருந்தாலும், வேதத்தில் ஆண்டவர் காகத்தை அசுத்தமான பறவைகளின் பட்டியவில் சேர்க்கிறார். (#லேவியராகமம் 11:13-15), அவைகளை புசிக்க கூடாது என்று யூதர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.

நோவா பேழையிவிருந்து வெளியே விட்ட பறவைகளில் புறாவை மட்டும் திரும்ப உள்ளே சேர்த்துக் கொள்கிறான்.

ஆனால் காகம் ஜலம் வற்றும் வரை போகிறதும் வருகிறதுமாய் இருந்தது என்று நாம் வாசிக்கிறோம்.
நோலா அதனை பேழைக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை. காகம் செத்த பிணங்களை உண்ணும் பறவையானதால் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்ட ஜனங்களின் பிரேதங்களை உண்பதற்கு அது காத்துக் கொண்டிருந்தது.

இதனால் அசுத்தமானதை உண்ணும் அந்த பறவையை நோவா தன்னிடமாய் உள்ளே சேர்த்துக் கொள்ளவில்லை.

#I_இராஜாக்கள் 17 : 4-6 வசனங்களை வாசிக்கும் பொழுது. எலியா தீர்க்கதரிசி பசியாக இருந்தபோது கர்த்தர் காகத்தின் மூலமாக உணவை அனுப்பி அவரை போஷித்தார்.

இதை வாசிக்கும் பொழுது கர்த்தர் எதற்காக அசுத்தமான ஒரு பறவையைக் கொண்டு எலியாவை போசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

எத்தனையோ அழகான, சுத்தமான பறவைகள் இருக்கும் பொழுது எதற்காக அசுத்தமான காகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவர் பார்வையில் அற்பமாக எண்ணப்படும் அழகற்ற, அசுத்தமான பறவையைக் கொண்டு எலியாவிற்கு உணவளிக்க கர்த்தர் தெரிந்து கொள்கிறார்.

காகங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை:-

காகங்களைப் போல கர்த்தரை நோக்கி எப்பொழுதும் துதித்துக் கொண்டிருக்க வேண்டும்.
காகங்கள் எப்பொழுதும் விழிப்போடு இருக்கும். அதை எளிதில் உயிருடன் பிடித்து விட முடியாது.
நாமும் சாத்தான் நம்மை விழுங்கி விடாதபடிக்கு ஆவிக்குரிய ஜீவியத்தில் எப்பொழுதும் விழிப்போடு காணப்பட வேண்டும்.

காகங்களைப் போல நாமும் கூடி வாழ வேண்டும். உணவு கிண்டத்தால் பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.

அதிகாலையிலேயே எழுந்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்த்து, உணவு ஊட்டி, பறக்க கற்றுத் தருவதைப் போல நாமும் நல்ல விஷயங்களை நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்.

கழுகு தன்னைவிட பலம் வாய்ந்தது என்றாலும் தன்னுடைய எல்லைக்குள் வந்தால் காகம் அதை விரட்டி அடிக்கும். 

இதுபோல நாமும் சாத்தான் நம்மைத் தொடாத படிக்கு அவனை எதிர்த்து நிற்க வேண்டும்.
நம் வாழ்க்கையை அவன் தொடாதபடி கிறிஸ்துவின் பலத்தோடு கூட நாம் அவனை மேற்கொள்ள வேண்டும்.

அன்பு நண்பர்களே! தேவன் படைத்த படைப்பில் ஒல்வொன்றகும் ஒவ்வொரு பயன் உண்டு எதையும், யாரையும் அற்பமாகவும், இழிவாகவும் எண்ணக்கூடாது.

காகத்தை போல அசுத்தத்திலும், சேற்றிலும், குப்பாயயிலும் கிடந்த நம்மைத் தேவன் தெரிந்து கொண்டு அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி, பரிசுத்தப்படுத்தி, உன்னத பணியை செய்யும் பாத்திரங்களாக வைத்திருக்கிறார்.

"அவர் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்" (#சங்கீதம் 147:9)
காகத்தை போல அதேகர் பார்வையில் நீ இன்று அற்பமாக, ஒன்றுக்கும் உதவாதளைாக, உதவாதவனாக காணப்படலாம். ஆனால் உன்னைக் கொண்டு அவர் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும்.
நீ அவருடைய படைப்பில் விசேசித்தவன்/ விசேசித்தவள் என்பதை மறந்துவிடாதே! ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!