இலங்கையில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

#SriLanka #Sri Lanka Teachers #School #அறிவித்தல் #Ministry of Education
Nila
2 years ago
இலங்கையில்  ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வருடத்தில், பல்வேறு காரணங்களால் வழமையான பணியிடங்களை விட்டு வேறு சில பாடசாலைகளில் டிசம்பர் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி நியமனத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியாண்டு நிறைவடையும் வரையில், குறிப்பாக மார்ச் 24 ஆம் திகதி வரை குறித்த ஆசிரியர்களின் பணி நியமனம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இடமாற்ற சபைகள் மூலம் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் மீண்டும் கடிதம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், இது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதம் அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!