புத்தாண்டுக்குள் முட்டை விலை குறைவடையும்: அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
#SriLanka
#Egg
#prices
#supermarket
Mayoorikka
2 years ago

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டையை கொள்வனவு செய்ய முடியாத வறிய குடும்பங்களுக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கும் சங்கம் தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று (28) கொழும்பில் நான்கு இலட்சம் முட்டைகள் ஒரு முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில்லறை சந்தையில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், நுகர்வோருக்கு மலிவான முட்டைகளை வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்ய லாரிகளைப் பயன்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் சமீபத்தில் முடிவு செய்துள்ளனர்.




