இன்றைய வேத வசனம் 30.12.2022: என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
ஒரு ஊழியர், ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பெருகி கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் ஊழியம் செய்யும்படி இரகசியமாய்ப் போயிருந்தார்.
ஒருநாள் தனி மனிதராய் அவர் மாஸ்கோவிலுள்ள செங்கோட்டை அருகே நின்று கொண்டிருந்தபோது, இலட்சம் லட்சமான கம்யூனிஸ்ட் வீரர்கள் அணிவகுத்துக் கொண்டு பயங்கரமான சத்தத்தோடு, "நாங்களே முழு உலகத்தை ஜெயிப்போம்" என்ற சத்தத்தோடு வருவதைக் கண்டார்.
அந்த ஊழியர் சொன்னாராம், கர்த்தர் மட்டும் எனக்கு ஒரு தேவ வசனத்தை நினைப்பூட்டாதிருந்தால், நான் பயத்தால் நடுங்கிப்போயிருந்திருப்பேன் என்றார்.
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (#I_யோவான் 4:4)
அந்த வசனத்தை நான் தியானிக்கத், தியானிக்க, அத்தனை ரஷ்ய படை பலத்தைக் காட்டிலும் நான் அதிகமான பெலன் கொண்டவன் என்பதை உணர்ந்து கொண்டேன். என் பயமெல்லாம் ஓடிப்போய்விட்டது!
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். (#ஏசாயா 41:10)
என்ற வாக்குத்தத்தம் எவ்வளவு மேன்மையானது! எவ்வளவு வல்லமையுள்ளது!
பயப்படாதேயுங்கள், தேவஜனமே, கர்த்தர் உங்கள் கரத்தை பிடித்திருக்கிறார் சோர்ந்துபோகாதிருங்கள், கர்த்தரில் பெலப்படுங்கள். ஆமென்!! அல்லேலூயா!!!
#II_கொரிந்தியர் 12:9
கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.