உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து மைத்திரிபால சிறிசேனவின் ரிட் மனு ஜனவரி 23 வரை ஒத்தி வைப்பு

#SriLanka #Easter Sunday Attack #Maithripala Sirisena
Prasu
1 year ago
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து மைத்திரிபால சிறிசேனவின் ரிட் மனு ஜனவரி 23 வரை ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட  வழக்கின் விசாரணைகளை  ஆட்சேபித்து, மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதி  மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த  கோட்டை நீதிவான் நீதிமன்ற வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு  பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு  கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சி.ஏ.ரிட் 354/22 எனும் எழுத்தாணை மனு (ரிட்) மீதான விசாரணைகளே இவ்வாறு 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

 நேற்றைய தினம் இந்த ரிட் மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகி, கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை எந்த சட்ட அடிப்படையும் அற்றது என வாதிட்டார்.

இந்நிலையிலேயே  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு இதன்போது வழக்கை ஒத்தி வைத்து  அறிவித்தது.

முன்னதாக  10 வாரங்கள் வரை  கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட  வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இக்காலப்பகுதியில், மைத்திரிபால சிறிசேனவுக்கு  பாதகமான வகையில் உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்க கூடாது எனவும்  மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2022 ஒக்டோபர் 14 ஆம் திகதி   கோட்டை நீதிவானுக்கு உத்தரவிட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!