முகம் இன்ஸ்டன்ட் இக்ளோ ஆக வேண்டுமா - இந்த இந்த ஃபேஸ் பேக் போதும்

Mani
7 months ago
முகம் இன்ஸ்டன்ட் இக்ளோ ஆக வேண்டுமா - இந்த இந்த ஃபேஸ் பேக் போதும்

நம்மில் பலர் சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு பாதிப்பிலிருந்து மீள ஏகப்பட்ட ஃபேஸ் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம் இனி கெமிக்கல் நிறைந்த கிரீம்களுக்கு பதிலாக இயற்கையாக ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.

முட்டை ஃபேஸ் பேக்

  முட்டை ஃபேஸ் பேக் செய்வதற்கு முதலில் இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு அதிலிருந்து வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்துக் கொள்ளவும் இதனை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்தில் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பின்பு நன்றாக முகத்தை தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவிக்கொண்டு ஒரு காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளவும் பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை நாம் முகத்தில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை வாஷ் செய்து கொள்ளவும், இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் நம் முகம் நல்ல இக்ளோ கிடைப்பதை பார்க்கலாம்.

வெற்றிலை ஃபேஸ் பேக்

வெற்றிலை ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு முதலில் நாம் 10 வெற்றிலையை எடுத்துக் கொள்ளவும் பின்பு சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு நாம் தயாரித்த இந்த வெற்றிலை பேஸ் பேக்கை நம் முகத்தை சுத்தமாக கழுவி பின் முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் வாஷ் கொள்ளவும், இயற்கை மருத்துவ குணம் நிறைந்த இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள், அக்கினி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முகம் க்ளோவ் ஆகும்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு