கயானாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு

#Accident #world_news #fire #Tamilnews #Breakingnews #School Student #Died #ImportantNews
Mani
2 years ago
கயானாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு

கயானா

தென்அமெரிக்க நாடான கயானாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். கயானாவில் மஹ்டியாவில் உள்ள மேல்நிலை பள்ளியில் மாணவர் படுக்கை அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் பலர் தீ பிடித்த அறையில் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும், தீ விபத்தில் சிக்கி அலறியடித்த மாணவர்களை மீட்கும் பணியையும் மேற்கொண்டனர். அப்போது தீ காயங்களுடன் மாணவர்கள் பலர் வெளியே குதித்து உயிர் பிழைத்த நிலையில் 20 மாணவர்களை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் மாணவ, மாணவிகள் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் விடுதியின் குளியல் அறையில் தீ விபத்து நேரிட்டதாக தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!