போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

#Sri Lanka #Arrest #Police #drugs #Lanka4 #sri lanka tamil news
Benart
4 months ago
போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெனமுல்ல பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அத்துரிகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (28) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 50 கிராம் 610 மில்லிகிராம் ஹெரோயின், 101 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 240 கிராம் 900 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹேனமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடையவர்.

 குறித்த பெண் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு