மைத்திரியின் தம்பியின் வைர மோதிரமும் 5000 டொலர்களுடன் தப்பியோடிய பாதுகாவலர்

மைத்திரியின் தம்பியின் வைர மோதிரமும் 5000 டொலர்களுடன் தப்பியோடிய பாதுகாவலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (சமிந்த சிறிசேன) சகோதரருக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வைரத்துடன் கூடிய தங்க மோதிரம் மற்றும் ஐம்பதாயிரம் டொலர்களுடன் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில் நேற்று (29) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். எம். எச். டி. சில்வாவின் பணிப்புரைக்கமையஇ சந்தேக நபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசி தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபரின் இருப்பிடத்தை கண்டறிய முடிந்துள்ளதாக கூறும் பொலிஸார், சந்தேகநபருக்கு வேறு நபர் உதவி செய்துள்ளதாகவும் நம்புகின்றனர்.



