சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டவர்கள் புதுடில்லி விமான நிலையத்தில் கைது!
#SriLanka
#Arrest
#Canada
#Delhi
Mayoorikka
1 year ago

இந்திய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையர்களை புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையர்களும் புதுடில்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் மகேந்திரராஜா என்ற இலங்கையை சேர்ந்த முகவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



